30 ஜூன், 2009

சாராயம்

: சாராயம் :



மலைப்பாம்பைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் திகைப்பாய் இருக்கிறது. ஒரு பெரிய இரையை விழுங்கிவிட்டுச் சலனமில்லாமல், தவிப்புகள் இல்லாமல், மாதக் கணக்கில் கரையான் ஏறுவது தெரியாமல் செரிக்கும்வரை மரம் சுற்றிக் கிடக்கிறது. எப்பேர்ப்பட்ட கம்பீரம் அது! மனிதனை போன்ற அற்பப் பிராணிக்கோ ஒரு சிறிய இரையை - அனுபவத்தை விழுங்கிச் செரிக்க என்னென்னவோ தேவைப்படுகிறது சாராயம் முதல் கவிதைவரை. விழுங்கி மௌனமாய் செரித்தி மோனங்க்க்கொள்ளும் வலிமை சாத்தியப்படும் போது , கவிதையைவிட நுட்பமாய் சாரயத்தைவிட போதையாய் ஒன்று நிகழலாம்.


-மனுஷ்ய புத்திரன்
("என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" நூலின் முன்னுரையில் இருந்து)
[ ... ]

25 ஜூன், 2009

கடவுள் உண்டு

: கடவுள் உண்டு :





கடவுள் இல்லையென்று
கத்திக்கொண்டிருந்தவன் தான்
தேடிப்பார்த்துவிடலாம் என்று
தெருவில் இறங்கிவிட்டேன்
கோயில், குளம், மசூதி,
தேவாலயம் என்று
எங்கெல்லாமோ
தேடித் தேடித் தேடி
தொங்கிப்போன முகத்தோடு
தொடர்வண்டி நிலையம் வந்தேன்
பறந்துகொண்டிருக்கும் உலகில்
பதற்றமேயின்றி
"பீ" அள்ளிக் கொண்டிருந்தான்
என் பிதாமகன்
அடப்பாவிகளா
கடவுள் இல்லையென்கிறீர்களே
உருப்படுவீர்களா நீங்கள்
அப்ப நாற்சந்திகளில்
நரகலை அள்ளிக்கொண்டிருப்பவர் யார்?

-Kavimathi
[ ... ]